தெலங்கானாவில் புதிதாக காதல் திருமணம் செய்த இளைஞர் பெண்ணின் குடும்பத்தினரால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானாவின் சந்தனகரில் இளைஞர் ஹேமந்த் குமார், அவந்தி ரெட்டி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் 11 ஆம் தேதிதான் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே பட்டதாரிகள். அவந்தி ரெட்டியின் குடும்பம் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவந்தியின் குடும்பத்தினர் தம்பதிகளிடம் சமாதானம் பேசுவதுபோல் பேசி இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே அவந்தி ரெட்டியை காரிலிருந்து கீழே இறக்கிவிட்டுவிட்டு ஹேமந்த் குமாரை அடித்து உதைத்துள்ளனர். கணவர் தன் கண் முன்னே அடித்து உதைக்கப்படுவதைப் பார்த்த, அவந்தி ரெட்டி காவல்துறைக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார்.
ஆனாலும், ஹேமந்த் குமாரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ஹேமந்த் உடல் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மறுநாள்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில் அவந்தியின் மாமா யுகந்தர் ரெட்டி கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். ”காவல்துறை நான் தகவல் கொடுத்த உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் எனது கணவர் உயிரோடு இருந்திருப்பார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”என்றார்.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?