நீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாராவில் சுற்றுலாப் பயணிகளைபோல நடித்து டஜன் கணக்கான மக்களை ஏமாற்றிய இரு சைபர் கிரைம் குற்றவாளிகளை கைது செய்தனர்.


Advertisement

image

சினிமா க்ரைம் த்ரில்லர் போல நடந்த இந்த சம்பவத்தில், ரூபாய் 11 லட்சத்தை இழந்த ஒரு வழக்கறிஞரின் புகாரின் பேரில், அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் குழு ஜம்தாராவில் தேடுதல் வேட்டையை தொடங்கியது.


Advertisement

இணைய கொள்ளைக்கூட்டத்தின் உறுப்பினர்களைத் தேடி ஆறு போலீஸ்காரர்கள் அடங்கிய குழு ஜம்தாராவுக்குச் சென்றது. ஆறு பேரும் தங்கள் தோற்றத்தை மறைக்க நீண்ட தாடியையும் மீசையையும் வளர்த்து சுற்றுலாப் பயணிகளாக தங்களை காட்டிக் கொண்டு தேடுதலை தொடங்கினார்கள். ஜார்க்கண்டிற்கு வந்த பின்னர், குஜராத் போலீசார் 20 வயது சிவம் குப்தா மற்றும் அஜய் மண்டல் என அடையாளம் காணப்பட்ட இருவரை கைது செய்து இருவரும் அகமதாபாத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

"சோஹைல் போன்றவர்கள் இந்த இணைய திருட்டு கும்பலுக்கு மக்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வழங்குகிறார்கள். மற்றவர்கள் அந்த எண்களுக்கு KYC விபரங்களைப்பெற எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். இந்த கும்பலின் ஒரு நபரின் எண்ணிலிருந்து மட்டும் 2500 செய்திகளை அனுப்பப்பட்டுள்ளது. சோஹைல்கான் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது, "என்று இன்ஸ்பெக்டர் ஆர்.எஸ்.முச்சலா கூறியுள்ளார்.

“ஒருவேளை நீங்கள் இந்த KYC ஐ பூர்த்தி செய்ய இணங்கவில்லை என்றால், உங்களின் Paytm கணக்கு மூடப்படும் என்று மக்களுக்கு போலி எஸ்.எம்.எஸ் அனுப்பட்டுள்ளது. மக்களுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், அவர்களில் சிலர் போலி கால் சென்டர் நிர்வாகியை அழைப்பதால், மறுமுனையில் உள்ளவர் டீம்வியூவர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யச் சொல்வார். இது சம்மந்தப்பட்ட எண்களின் தொலைபேசியின் தொலைதூர தொடர்பை சைபர் கிரைம் கொள்ளை கும்பலுக்கு வழங்குகிறது. அவர்கள் அந்த நபரிடம் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல்லை அணுக ரூ .1 பரிவர்த்தனை செய்யுமாறு கேட்பார். அடுத்த கணம் பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து ஒரு பெரிய தொகை திருடப்படும்” இதுபோலத்தான் இந்த திருட்டு நடந்துள்ளது என்று காவல்துறையினர் விளக்கினார்கள்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement