காஞ்சிபுரம்: இருவேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 350 கிலோ குட்கா பறிமுதல்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட இருவேறு இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 350 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் கடையில் குட்கா விற்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். 

image


Advertisement


மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் குட்காவை மொத்தமாக சப்ளை செய்த குரோம்பேட்டையைச் சேர்ந்த சுப்பையாவின் வீட்டிற்குச் சென்ற போலீசார், சுமார் 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். சுப்பையா குட்காவை மொத்தமாக வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் இன்று அதிகாலை போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், சரக்கு ஆட்டோவில் கடத்திய வந்த 150கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருவள்ளூர், வெங்கல் அருகே உள்ள கோடுவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி, ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement