“அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்து வருகிறது” - ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


Advertisement

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. அதன் காரணமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் தடைபட்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது, இருவரும் உடல்நல பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை! எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது! கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement