கிரிக்கெட்டின் தீவிர ரசிகரான சாந்தணு சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். பல ஆண்டுகளாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ரசிகரான அவர், குறிப்பாக தோனியின் பெரும் ரசிகர். ஐபிஎல் போட்டி நடக்கும் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக மஞ்சள் நிற ஜெர்சி அணிவதை சாந்தணு வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதற்கும் மேலாக இந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கிய நாளன்று சென்னையில் தோனி தங்கும் ஹோட்டல் அறையில் ஒரு நாளைச் செலவிட்டிருக்கிறார் சாந்தணு. சூப்பர்கிங்ஸ் அணி வழக்கமாக தங்கும் அந்த பிரபலமான ஹோட்டலில் சனிக்கிழமையன்று மனைவியுடன் தங்கியுள்ளார். தோனியின் அறை முழுவதும் அவரது புகைப்படங்கள் மற்றும் கையெழுத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கிரிக்கெட்டில் ஆர்வமில்லாத மனைவியை ஆச்சரியப்படுத்த நினைத்த சாந்தணு, சென்னை அணியினர் தங்கும் ஹோட்டலிலேயே தங்கி ஐபிஎல் போட்டியைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். ஏதோ வாரவிடுமுறைக்குச் செல்வதுபோல அங்கே அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்திவிட்டார்.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள சாந்தணு, அந்தப் படத்தின் வெளியீட்டுக்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறார்.
See how I got @KikiVijay to watch the first #IPL game yesterday
“A Day in Dhoni’s Room”https://t.co/gceLiekuSy #WithLoveShanthnuKiki #CSK #Dhonism #MSDhoni #Yellove @Pickyourtrail @CrownePlazaChn
*Not a paid promotion* pic.twitter.com/efYFbghTCJ— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 20, 2020
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்