சென்னை VS மும்பை : டாப் 10 தருணங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

image


Advertisement

*பிளெயிங் லெவன் தேர்விலேயே இந்த ஆட்டத்தை இழந்துவிட்டது மும்பை. சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு கூட்டணியை தேர்வு செய்தது தப்பு கணக்காக மாறி விட்டது. 

*பவர் பிளேயில் ரோகித் மற்றும் டிகாக் என இரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களையும் சென்னை பவுலர்கள் அவுட் செய்தது. 


image

*அதற்கடுத்து களம் இறங்கிய பேட்ஸ்மேன்களில் சவுரப் திவாரியை தவிர மும்பையின் அனைத்து பேட்ஸ்மேன்களும் கிரீஸுக்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருந்தனர். 


Advertisement

*டிகாக் மற்றும் திவாரியை தவிர ரோகித், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா சகோதர்கள், பொல்லார்ட் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்பியது மும்பை தோல்வியை தழுவ மிகமுக்கிய காரணம்.

image

*முதல் 11 ஓவர்களில்  92 ரன்களை  குவித்த மும்பை அதற்கடுத்த 9 ஓவர்களில் வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.


image

*தோனி மிரட்டலான கேப்டன்ஷியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் இன்னிங்ஸ் டோட்டலாக டேமேஜானது. அவரது கேட்பன்சியில் இந்த ஆட்டம் அவருக்கு  நூறாவது வெற்றியாகவும் அமைந்தது.


image

*14 ஓவர்களில் 121 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது மும்பை. ஜடேஜா வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க சவுரப் திவாரி முயன்ற போது டீப் லாங் ஆன் திசையில் பீல்டராக நின்று கொண்டிருந்த டுபிளசிஸ் சிக்ஸராக வேண்டிய பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார். அடுத்த சில பந்துகளில் மும்பை பேட்ஸ்மேன்கள் லட்டு போல கொடுத்த இரண்டு கேட்ச்களை பிடித்து அசத்தியிருந்தார் டுபிளசிஸ். பேட்டிங்கிலும் டுபிளசிஸ் 58 ரன்களை குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு டிரம்ப் கார்டாக அமைந்தார்.

image

*சென்னை அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் ஒரு விக்கெட், இரண்டு கேட்ச் மற்றும் ஆறு பந்துகளில் 18 ரன்களை கொடுத்து அசத்தியது சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். 


image

*6/2 என சரிவிலிருந்த சிஎஸ்கே அணியை 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டது ராயுடு, டுபிளசிஸ் கூட்டணி. 


image

*பலமான பேட்டிங் லைன் அப் கொண்ட மும்பை அணியை 162 ரன்களில் சென்னை சுருட்டியிருந்தாலும் பியூஸ் சாவ்லாவை தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். அடுத்த போட்டியில் சென்னை இந்த சிக்கலை சரி செய்தாக வேண்டும்.loading...

Advertisement

Advertisement

Advertisement