காணாமல் போன செல்போனில் குரங்கின் செல்ஃபிகள் - ஷாக் ஆன இளைஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலேசியாவை சேர்ந்தவர் சாக்ரடிஸ் ரோட்ஸி(20 வயது). இவர் பாட்டு பஹாட் கல்லூரியில் படித்துவருகிறார். இவர் தனது அறையில் இரவு தூங்கும்போது தனது செல்போனை அருகில் வைத்து தூங்கியிருக்கிறார். காலை எழுந்து பார்த்தபோது செல்போன் காணாமல் போய்விட்டது.


Advertisement

அங்கு யாரும் வந்து கொள்ளையடித்துச் சென்றதற்கான எந்த அறிகுறியும் இல்லை. யாரோ மந்திரவித்தை செய்து தனது செல்போனை எடுத்துவிட்டதாக நினைத்திருக்கிறார். தனது மொபைல் லொகேஷனை பின்பற்றி சென்றபோது, தன் வீட்டிற்கு பின்புறத்திலுள்ள காட்டிற்குள் அழைத்துச் சென்றிருக்கிறது. தனது அப்பா போனிலிருந்து அழைத்தபோது, முழு ரிங் சென்றிருக்கிறது. லொகேஷனை பின்பற்றி பார்த்தபோது ஒரு பனைமரத்தின்கீழ் மொபைல் கிடப்பதை பார்த்திருக்கிறார்.

வீட்டிற்கு கொண்டுசென்று ஒருவேளை திருடன் போட்டோ எடுத்திருக்கலாம் என பார்த்தபோது அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் குரங்கு ஒன்று விதவிதமாக செல்ஃபிகளை எடுத்திருந்ததைப் பார்த்து ஆச்சர்யமடைந்திருக்கின்றனர். சாக்ரடிஸ் அந்த புகைப்படங்களை வீடியோவாக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோ பதிவிட்டதிலிருந்து இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். திறந்திருந்த ஜன்னல் வழியாக குரங்கு உள்ளே வந்து எடுத்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement