தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை- எல்.முருகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக நீதிக்காக போராடியவர் தந்தை பெரியார். அவருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.


Advertisement

image

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது “  மோடியின் பிறந்தநாளை தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். யாருடைய கலாச்சாரத்தையும் நாங்கள் மறைக்கவில்லை. எங்கள் கலாச்சாரத்தை முன்னிறுத்துகிறோம்.


Advertisement

நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவந்த காங்கிரஸோடு கூட்ணியில் இருந்த போது எதிர்க்காமல் இப்போது திமுக எதிர்ப்பது நாடகம். நீட் தேர்வு விவகாரத்தில் 13 மாணவர்கள் உயிரோடு விளையாடியது திமுகவே. சமூக நீதிக்காக போராடியவர் தந்தை பெரியார். அவருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று பேசினார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement