தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகிறது "லஷ்மி பாம்" !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகிறது நடிகர் அக்சய் குமார் நடித்துள்ள "லஷ்மி பாம்".


Advertisement

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்திருந்த படம் 'காஞ்சனா'. தற்போது 'லக்‌ஷ்மி பாம்' என்கிற பெயரில் இந்தியில் உருவாகியுள்ளது. இந்தியிலும் இத்திரைப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்கியுள்ளார். இதில் காஞ்சனா படத்தில் நடிகர் சரத்குமார் நடித்த திருநங்கை கதாப்பாத்திரத்தில் திருநங்கையாக நடிக்கிறார் அக்ஷய்குமார்.

image


Advertisement

கொரோனா பொது முடக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் லக்‌ஷ்மி பாம் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. அக்‌ஷய் குமார் பேச்சுவார்த்தை நடத்தி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.


Advertisement

இந்நிலையில் இத்திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்ஷய் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement