போலீஸிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த இளைஞர்கள்... மரணத்தில் முடிந்த ‘எஸ்கேப்’ முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஸ்ஸாமில் போதைப்பொருள் பயன்படுத்தி சிக்கிய இளைஞர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்ததில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.


Advertisement

அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள காம்பூர் பகுதியில் உள்ள தேடேலிசாரா கிராமத்தைச் சேர்ந்த தேபாசிஸ் தாஸ் என்ற இளைஞர் செப்டம்பர் 12ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவிலில் அமர்ந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்தி உள்ளார். அங்கு வந்த போலீஸார் அவர்கள்மீது தடியடி நடத்தினர். போலீஸாரிடமிருந்து தப்பிக்க தேபாசிஸும், அவருடைய 4 நண்பர்களும் நிஷாரி ஆற்றில் குதித்தனர். மற்ற 4 இளைஞர்களும் தப்பித்து அடுத்தபக்கம் கரை சேர்ந்தபோது தேபாசிஸை மட்டும் காணவில்லை.

image


Advertisement

திங்கட்கிழமை, என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் காம்பூரில் அவரது உடலை ஆற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி உள்ளூர்வாசிகள் மாவட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement