யுஜிசி - நெட் தேர்வு ஒத்திவைப்பு - செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் ஜூன் மாதம் நடக்க இருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்( Indian Council of Agricultural Research) தேர்வுகளின் தேதிகளை கருத்தில்கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் நெட் தேர்வினை மீண்டும் ஒத்திவைத்திருந்தது.


Advertisement

செப்டம்பர் 16 -25க்குள் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என உறுதி செய்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வுகள் 16,17,22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதால், நெட் தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என என்.டி.ஏ வின் மூத்த இயக்குநர் சாதனா பரஷார் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

இரண்டு தேர்வுகளுக்கும் முன்பதிவு செய்திருக்கும் மாணவர்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு நெட் தேர்வின் தேதிகள் மாற்றிவைக்கப்பட்டுள்ளது. பாடவாரியான, நேரவாரியான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என சாதனா கூறியுள்ளார்.

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement