பல எதிர்ப்புகளைத் தாண்டி இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நீட் தேர்வு இன்று முடிந்துவிட்ட நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்
பிரஷா
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாமே மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள். உள்ளே செல்வது, இருக்கைகள் மற்றும் வெளியே வரும்வரை சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதில் கவனமாக இருந்தார்கள். என்.டி.ஏ வில் இருக்கும் கேள்வி பதில்கள்தான் அதிகம் வரும் என்று கூறியதால் அதற்கு ஏற்றாற்போல் தயார் செய்திருந்தேன். ஆனால் அதிலிருந்து 3 அல்லது 4 கேள்விகள்தான் கேட்டிருந்தார்கள். உயிரியல் பிரிவில் 5-7 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. வேதியியல் பிரிவில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சுலபமான கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். இயற்பியலில் எதிர்பார்க்காத விதமாக மிகவும் கடினமான கேள்விகளைக் கேட்டுவிட்டார்கள். அதுதவிர, நேரம் சற்றுக் குறைவாகவே இருந்தது. மற்றபடி தேர்ச்சிபெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சிவராம கிருஷ்ணன்
கொரோனா பற்றிய பயமே இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். தேர்வு அறைகளும் மிகவும் சுத்தமாக இருந்தது. நன்றாக படித்திருந்தால் கண்டிப்பாக தேர்ச்சிபெற்று விடலாம். மிகவும் கடினமாக இருந்தது என்று சொல்லமுடியாத அளவுக்கு எழுதும் அளவிற்கே இருந்தது.
சுடலை வடிவு
சமூக இடைவெளியைக் கடைபிடித்ததால் தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. தேர்வு விதிமுறைகளில் குறிப்பிட்டு இருந்ததைப் போன்றே அனைத்து பாதுகாப்பு சாதனங்களையும் அவர்களே கொடுத்தார்கள். தேர்வு பயமின்றி தேர்வு எழுதிவிட்டு வந்திருக்கிறேன்.
ஹரிப்பிரியா
நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் தேர்வு குறித்த பயம் அதிகரித்துவிட்டது. 3 மணிநேரத்திற்கு முன்பே தேர்வு அறைக்குள் சென்றுவிட்டேன். நீண்ட நேரம் மாஸ்க் மற்றும் கையுறைகளை அணிந்திருந்தது சற்று சிரமமாக இருந்தது. கையுறை அணிந்து பேனா பிடித்து எழுதுவதற்கும் சிரமமாக இருந்தது. சில பகுதிகளில் கேள்விகள் சற்று சுலபமாகவும், சில பகுதிகளில் சற்று கடினமாகவும் இருந்தது. மற்றபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜோஷ்
என்னை பொருத்தவரை எதிர்பார்த்ததைவிட தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. சரியாக 2 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு வாங்கிவிட்டார்கள். கொரோனா பயமே இல்லை. அந்த அளவுக்கு சமூக இடைவெளி, மாஸ்க், சானிடைசர் போன்ற அனைத்தையும் மிகச்சரியாக கடைபிடித்திருந்தார்கள்.
Loading More post
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’