தூக்கிடுவதுபோல விபரீத செல்ஃபி : பரிதாபமாக உயிரை இழந்த இளைஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியான திரவியம் செல்ஃபி பிரியராக இருந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.


Advertisement

இந்நிலையில், புதுவயலில் நடந்து கொண்டிருக்கும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக திரவியம் அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் அவர் விபரீதமாக செல்ஃபி எடுத்துள்ளார்.

அதனை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதேபோல இரண்டு முறை செல்ஃபி எடுத்துவிட்டு, மூன்றாவது முறையாக செல்ஃபி எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக கயிறு இறுக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தாக தெரிகிறது. 


Advertisement

இதுகுறித்த தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் திரவியத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திரவியத்தின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே திரவியத்திற்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement