ஆன்லைன் வகுப்பில் இருந்த மாணவி : கதவை உடைத்துக்கொண்டு வந்த திருடர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆன்லைன் வகுப்பில் இருந்த மாணவியின் வீட்டிற்குள் கதவை உடைத்துக்கொண்டு சென்று திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

ஈகுவடார் நாட்டின் ஆம்பட்டோவில் மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் ஆங்கிலம் பயின்று கொண்டிருந்தார். அவருடன் மற்ற மாணவர்கள் பலரும், ஆசிரியரும் ஜூம் மீட்டிங் செயலி மூலம் வீடியோ காலில் இணைந்திருந்தனர். அப்போது அந்த மாணவியின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு திருடர்கள் சிலர் உள்ளே வந்தனர். மாணவியை மிரட்டிய அவர்கள் உடனே அவரது லேப்டாப்பில் சென்றுக்கொண்டிருந்த ஆன்லைன் வகுப்பை நிறுத்தினர்.

image


Advertisement

இதை ஆன்லைன் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சில மாணவர்கள் திருடு நடைபெறும் வீட்டிலிருக்கும் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளனர். மற்ற சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் அப்பெண்ணிடம் இருந்த நகைகள், பணம், லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு அந்த திருடர்கள் காரில் சென்றுவிட்டனர்.

image

இதையடுத்து ஆன்லைன் வகுப்பு வீடியோவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு திருடர்களை ஈகுவடார் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் பெயர் லுயிஸ், வெலெண்டின், கார்லஸ் மற்றும் டோரியன் என்பது தெரியவந்துள்ளது.


Advertisement

“பவுலிங்கில் நீங்கள் பும்ரா அளவிற்கு சிறப்பாகஇல்லை” ரசிகரின் கேள்விக்கு பிராட் ’நச்’ பதில்

loading...

Advertisement

Advertisement

Advertisement