'போதும் திராவிட அரசியல்.. வேண்டும் ஆன்மிக அரசியல்...' - ரஜினி ரசிகர்களின் போஸ்டர்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பணத்தையும் பிணத்தையும் வைத்து அரசியல் செய்த திராவிட அரசியல் போதும் - இனி தமிழக மக்களின் நலனுக்காக விடிய வேண்டும் ஆன்மிக அரசியல் என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

image
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே, நான் அரசியலுக்கு வருவேன் எனவும், அரசியல் மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என அவர் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதேபோல நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்கி தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் பாஜகவிற்கு ரஜினி ஆதரவளிப்பார் எனவும், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் எனவும் சிலர் பேசி வருகின்றனர்.


Advertisement


இந்நிலையில் இன்று மதுரையில், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா, காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த தந்தை மகன், 2ஜி வழக்கு, இலங்கை தமிழர் படுகொலை உள்ளிட்ட படங்களை அச்சிட்டு பணத்தையும், பிணத்தையும் வைத்து தன் சுயநலத்திற்காக அரசியல் செய்த திராவிட அரசியல் போதும் எனவும், இனி தமிழக மக்களின் நலனிற்காக விடிய வேண்டும் ஆன்மிக அரசியல் என ரஜனி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement