தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் அமலுக்கு வந்த கட்டண உயர்வு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகம்‌ முழுவதும் 21 இடங்களில் சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.


Advertisement

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடி‌கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 21 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு‌ 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

image


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, கரூர் மாவட்டம் வேலஞ்செட்டியூர், மணவாசி, தருமபுரி மாவட்டம் பாளையம், விருதுநகர் மாவட்டம் புதூர் பாண்டியாபுரம்,‌‌ மதுரை மாவட்டம் எலியார்பத்தி, நாமக்கல் மாவட்டம் ராசம்பாளையம், விஜயமங்கலம், சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

image

திருச்சி மாவட்டம் சமயபுரம், திருப்பராயத்துறை, பொன்னம்பலப்பட்டி, தஞ்சை மாவட்டம் வாழவந்தான்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி,‌ வீரசோழபுரம்‌, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் புதிய கட்ட‌ணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கூடுதலாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement