”தேர்தலே அறிவிக்கவில்லை அதற்குள் மனுவா?” பீகார் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

SC-dismisses-plea-seeking-postponement-of-Bihar-polls--says-Covid-19-no-excuse

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீகார் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


Advertisement

image

இது தொடர்பாக அவிட் நாஷ் தாக்கூர் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அசோக் பூஷண் மற்றும் நீதிபதிகள் ஆர் எஸ் ரெட்டி மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவர்கள் “ இந்த மனுவானது முதிர்ச்சியில்லாதது. தேர்தலுக்கான கால அட்டவணையையே தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. தொற்றுநோய்களின் போது தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்” என்று கூறினர்.


Advertisement

புதிய வழிகாட்டுதல்களின்படி வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே ஒரு வேட்பாளருடன் செல்ல முடியும். ஒரு வாக்காளருக்கு வாக்களிக்கும் நாளில் வைரஸின் அறிகுறிகள் தெரிந்தால் அந்த நபருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் வந்து வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார். வாக்காளர்களுக்கு கையுறையும் வழங்கப்படும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement