[X] Close

அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன கடிதம் - ரூ.84 லட்சம் மோசடி செய்த நபர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரு தொழிலதிபர் உட்பட பலருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக பொய் சொல்லி 84 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக ஷார்ஜீல் பின் ஃபரீத் என்பவரை ஹைதராபாத் மத்திய குற்றவியல் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். 


Advertisement

image

‘எனக்கு வேலை வாங்கி தருவதாக ஷார்ஜீல் பின் ஃபரீத் சொல்லியதை நம்பி என்னிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட மோசடி செய்து விட்டார் என ரவீந்தர் என்பவர் கொடுத்த  புகாரின் அடிப்படையில் விசாரணையை நாங்கள் துவக்கினோம்’ என போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement

புகார் கொடுத்த ரவீந்தர் ஷார்ஜீல் வழங்கிய போலி பணி நியமனக் கடிதங்களையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் ஷார்ஜீலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

வேலை வாங்கி தருவதாக பலரிடம் சொல்லி ஷார்ஜீல் மொத்தமாக 84 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement