தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையை சேர்ந்த பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”எனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24ல் தொடங்க உள்ளதால், பள்ளி மாணவர்களை போல, தனி தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும். தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலிடெக்னிக் வகுப்பு எப்போது தொடங்கப்படும் எனவும் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading More post
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!