அடகு வைத்த நகையை திருப்பச் சென்ற மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பச் சென்ற 65 வயது மூதாட்டியிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.


Advertisement

imageமுதுகுளத்தூரில் எஸ்பிஐ வங்கி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.

image
இந்த நிலையில் முதுகுளத்தூர் அலியார் தெருவை சேர்ந்த சுபேதா என்ற 65 வயது மூதாட்டி தங்களது விவசாய பணிகளுக்காக தங்க நகையை வங்கியில் அடகு வைத்து இருந்தார். அந்த அடகு வைத்த நகையை திருப்புவதற்காக இரண்டு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற போது வங்கியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் மூதாட்டியிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.


Advertisement


இது குறித்து மூதாட்டி சுபேதா கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement