இன்ஸ்யூரன்ஸ் பணத்திற்காக கொலையா? - அமெரிக்காவில் இந்திய மாணவியின் கொலையில் புது திருப்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேசம் புலாந்த்ஷார் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் சுதீக்‌ஷாவின் மரணம் நிகழ்ந்தது. இவர் அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். சாலையில் செல்லும்போது இரண்டு நபர்கள் கேலிகிண்டல் செய்து துரத்திவந்ததால் விபத்து ஏற்பட்டதாக அந்த பெண்ணின் மாமா போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நடந்ததற்காக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும், அந்த பெண்ணிற்கு அதிக உதவித்தொகைக் கிடைத்துவந்ததால், இன்ஸ்யூரன்ஸ் பணத்திற்கு குறிவைக்கின்றனர் எனவும் போலீஸ் அதிகாரி சந்தோஷ்குமார் சிங் கூறினார். மேலும் வழக்கில் திருப்பம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.


Advertisement

சுதீக்‌ஷா இறந்து சுமார் 36 மணிநேரத்திற்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சிபிஎஸ்சி 12 வகுப்புத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருந்தார். மாசூசுட்சஸில் உள்ள பாப்ஸன் கல்லூரியின் முழுநேர உதவித்தொகையையும் பெற்றார்.

திங்கட்கிழமை காலையில் சுதீக்‌ஷா அவரது மாமா மற்றும் உறவினர் மகனுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர். அவரது மாமாதான் வண்டியை ஓட்டியதாக கூறினர். ஆனால் போலீஸ் தரப்பில் உறவினர் மகன்தான் வண்டியை ஓட்டிச்சென்றதாக தெரிவித்தனர்.


Advertisement

ஆனால் சுதீக்‌ஷாவிற்கு கிடைக்கும் உதவித்தொகை மிக அதிகம். மேலும் வண்டியை ஓட்டிய நபர் ஒரு பள்ளி மாணவர் என்றும் போலீஸ் அதிகாரி சந்தீஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த நேரத்தில் சுதீக்‌ஷாவின் மாமா சதேந்திரா பாட்டி, தாத்ரியில் இருந்ததாகவும், விபத்து ஏற்பட்ட இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே அவர் அங்கு வந்ததாகவும் அவருடைய மொபைல் லொகேஷனை வைத்து கண்டறியப்பட்டது.

image

ஒரே பொய்யை 50 முறைக்கு மேல் சொல்லி உண்மையாக்க முயற்சித்ததோடு பழியை போலீஸ் பக்கமும் திருப்பியுள்ளனர். இதுவரை கேலிகிண்டல் செய்து அவரை யாரும் துரத்தி வந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. வழியில் இரு நபர்கள் சென்ற சிசிடிவி காட்சிகள் நேற்று காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. எனவே அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் பிரிவு 279(பொதுவழியில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் பிரிவு 304-ஏ (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்) என்ற இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.


Advertisement

மேலும் இந்த வழக்கில் நீதிகிடைக்க கோரி சமூக ஊடகங்களில் பலர் கூறியுள்ளனர். உ.பியின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், புலாந்த்ஷாரில் தனது மாமாவுடன் பயணித்த ஒரு திறமையான மாணவி, பைக்கில் வந்த இரண்டு நபர்களின் தவறான செயலால் உயிரழந்துவிட்டார். இது மிகவும் துயரமான, அவமானமிக்க மற்றும் கண்டிக்கத்த ஒரு செயல். இப்படியிருந்தால் பெண்கள் எவ்வாறு முன்னேறுவார்கள்? குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் பிஎஸ்பி கட்சி சார்பில் பதிவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement