பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : ராணுவ மருத்துவமனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Advertisement

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மூளையில் இருந்த சிறிய அளவிலான கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை, அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் அவருக்கு இன்னும் வெண்டிலேட்டர் கருவியின் உதவியுடனே சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் இனி திமுக - பாஜக இடையேதான் போட்டி” : எல்.முருகன் சூசகம்

loading...

Advertisement

Advertisement

Advertisement