கொரோனா பரபரப்புகளுக்கிடையே சினிமா படப்பிடிப்பிற்காக துருக்கி சென்ற நடிகர் ஆமிர் கான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பொதுமுடக்க தளர்விற்கு பிறகு பாலிவுட் நடிகர் அக்சய்குமார் முதல் ஆளாக சினிமாப் பணிகளை தொடங்கினார். இப்போது ஆமிர்கான் தனது திரைப்படமான லால் சிங் சத்தாவை படமாக்க வெளிநாடு பறந்துள்ளார்.


Advertisement

image

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு வந்துள்ளார் ஆமிர்கான். அவர் தற்போது துருக்கியில் இருக்கிறார், அங்கு அவர் தனது அடுத்த படமான லால் சிங் சத்தா படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார். ஏற்கெனவே அமிர்தசரஸ் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு திட்டமிட்டிருந்தனர், ஆனால் தற்போது இந்தியாவிலுள்ள பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளின் படப்பிடிப்பை நடத்தவிருக்கின்றனர். சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திலுள்ள ஆமிர்கானுடன் துருக்கியில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement