கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை எல்லாமே அரசு மருத்துவமனை தான்’..முன்னுதாரணமான எம்.எல்.ஏ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

16 வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜனின் மனைவி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று கொண்டது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.


Advertisement

                    image 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன். கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் கடந்த 16 வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிவசங்கரி கருவுற்றதாகத் தெரிகிறது.


Advertisement

            image

மனைவி கருவுற்ற உடனே நாகராஜன் தனியார் மருத்துவமனைகளை அணுகாமல், மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனைவிக்கான மகப்பேறு மருத்துவத்தை பார்த்து வந்தார். கடந்த 9 ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் நல வார்டு அருகில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் கட்டிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

                      image


Advertisement

 இது குறித்து அவர் கூறும் போது “ பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுக் கொண்டோம். கடந்த 9 ஆம் தேதி எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் குழந்தையை அவர்களின் குழந்தையாகவே பார்த்து கவனித்தனர்” என்றார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

               image

loading...

Advertisement

Advertisement

Advertisement