குறைந்த விலையில் டிவி, பிரிட்ஜ் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபருக்கு தர்மஅடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் பாடியை சேர்ந்த பழனிமுத்து என்பவர் பழக்கமாகி உள்ளார். பின்னர் பழனிமுத்து குறைந்த விலையில் பழைய டிவி, பிரிட்ஜ், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக குமாரிடம் தெரிவித்துள்ளார்.

image


Advertisement


இதனை நம்பிய குமார் பழனிமுத்துவிடம் பொருட்களை வாங்க 30ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் பொருட்களை பெறுவதற்காக பழனிமுத்துவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆளையும் காணவில்லை. இதனால் நீண்ட நாட்களாக பழனிமுத்துவை குமார் தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பாடி லூகாஸ் பேருந்து நிலையம் அருகே பழனிமுத்து நின்று கொண்டிருந்ததை பார்த்த குமார் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து பழனிமுத்துவை பிடித்து இருசக்கர வாகனத்தில் அயனாவரம் கே.எச் சாலை அருகே அழைத்துச் சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

image
இதற்கு பழனிமுத்து சரியான பதிலளிக்காததால் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் தலைமை செயலக காலனி, வரதம்மாள் தோட்டம் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து பழனிமுத்துவை பைப் மற்றும் மட்டையால் குமார் மற்றும் அவரது நண்பரும் தாக்கியுள்ளனர். இதனால் பழனிமுத்து, குமார் மீது தலைமை செயலக காலனி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...
Related Tags : சென்னைChennai

Advertisement

Advertisement

Advertisement