"பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய போதும், தோனி எனக்கு முழு வாய்ப்பினை தந்தார்" ஷிகர் தவான் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2013 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின்போது எனக்கு தோனி பக்கபலமாக இருந்தார் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்பு, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 2013 ஆம் ஆண்டு பங்கேற்றது. அந்தத் தொடரில் எந்த அணியுடனும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டி வரை சென்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.


Advertisement

image

சாம்பியன்ஸ் கோப்பை நினைவுகளை பகிர்ந்த ஷிகர் தவான் "சாம்பியன்ஸ் கோப்பை வார்ம் அப் போட்டிகளில் என்னால் ரன்களை சேகரிக்க முடியவில்லை. ஆனாலும் எனக்கு சாம்பியன்ஸ் கோப்பையின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட தோனி வாய்ப்பு தந்தார். எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை கொடுத்தார்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement