கொரோனா காலத்தில் அனுமதியில்லாமல் போட்டோ சூட் : நடிகை வனிதா மீது வழக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை வனிதா வசித்துவருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி 20 நபர்களுடன் சேர்ந்து குடியிருப்பு பகுதியில் நிகழ்ச்சி நடத்தியதாக, குடியிருப்போர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிஷா தோடா போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

image


Advertisement

நிகழ்ச்சி தொடர்பாக தங்களிடம் எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்றும், அனுமதி எதுவும் பெறவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement