தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து மரணத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்: தென்காசி மாவட்டம் மற்றும் தென்காசி வட்டம், ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தஅணைக்கரை முத்து என்பவர் அவருடைய நிலத்தைச் சுற்றி உரிய அனுமதி பெறாமல் மின்வேலியை அமைத்துள்ளார் எனவும், அதனால் கடையம் வனத்துறையினர் ஜூலை 22 ஆம் தேதி இரவு இதனை கண்டுபிடித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததனர்.
அதன் பேரில் மின்இணைப்பை துண்டித்துவிட்டு, அணைக்கரைமுத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் எனவும், விசாரணையின் போது திரு. அணைக்கரைமுத்து அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையதிற்கு கொண்டு செல்லப்பட்டு,
பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இச்சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தலைமை குற்றவியல் நடுவர் அவர்களால் சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதித்துறை நடுவர் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த அணைக்கரைமுத்து அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூ. பத்து லட்சம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்