[X] Close

மாஸ்க் அணியாதவர்களுக்கு இப்படியொரு தண்டனையா..? - அதிரடி காட்டும் வடகொரியா

Subscribe
3-months-hard-labour-for-not-wearing-mask---North-Korea

உலகமே கொரோனா வைரஸால் கலங்கிக் கொண்டிருக்க, முன்பு எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தது வட கொரியா. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு அபராதமாக மூன்று மாத கடினை உழைப்பை விதித்துள்ளது வட கொரியா. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடுமையான புதிய விதிமுறைகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.


Advertisement

image

இதுகுறித்து வெளிவந்த ஒரு அறிக்கையில், குடிமக்கள் மாஸ்க் அணிந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க மாணவர்கள் குழு ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். இதற்காக உயர்நிலை பள்ளி மாணவர்களை தயார்படுத்தி இருக்கிறார்கள். மாஸ்க் அணியாமல் யார் வெளியே வந்தாலும் பாரபட்சமின்றி அவர்களுக்கு மூன்று மாத கடின உழைப்பு தண்டனையாக வழங்கப்படும் என வட கொரிய அதிகாரி ஒருவர் ரேடியோ ஃப்ரீ ஆசியாவிடம் தெரிவித்துள்ளார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close