’பாலிவுட் பார்ட்டிகளில் சுஷாந்தை ஓரம் கட்டினார்கள்’ விசாரணையில் வெளியான தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பை போலீஸ் சுஷாந்தின் மரணம் குறித்து இதுவரை 41 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதில் ஐந்து பேர் மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து இருந்தனர். மேலும் அவரிடம் பாலிவுட் பாகுபாடு காட்டியது எனக் கூறியிருந்தனர். அவர் சாரா அலி கானுடன் நடித்திருந்த ‘கேதார்நாத்’ மற்றும் க்ரித்தி சேனனுடன் நடித்திருந்த ‘ராப்தா’ போன்ற திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டபோது அவர் புறக்கணிக்கப்பட்டதை பல வீடியோக்களில் காணமுடிந்தது.


Advertisement

இதுகுறித்து கதையாசிரியரும் இயக்குநருமான ருமி ஜெஃப்ரியை பந்த்ராவிடம் போலீசார் விசாரித்தனர். சுஷாந்தின் அடுத்த படத்தை அவருடைய காதலியான ரியா சக்ரபோர்தியை வைத்து எடுப்பதாக திட்டமிட்டிருந்தார். கதை தயாராக இருந்தபோதிலும் ஊரடங்குக் காரணமாக மேற்கொண்டு திட்டமிட முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.

image


Advertisement

ஜெஃப்ரி ஜூன் 12ஆம் தேதி சுஷாந்துடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். மற்றொரு நடிகர் மூலமாகத்தான் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார் என தெரிந்துகொண்டதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை அங்கிதா லோகந்த், கங்கனா ரெனாவத், ஷேகர் சுமன் போன்ற பிரபலங்கள் சுஷாந்தின் ரசிகர்களுடன் சேர்ந்து அவருடைய இறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement