எம்.ஜி.ஆர் சிலை மீது காவித்துண்டு : புதுச்சேரியில் சலசலப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எம்.ஜி.ஆர் சிலை மீது காவித்துண்டு போர்த்தப்பட்டதால் புதுச்சேரி அருகே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. இந்த சிலை மீது மர்ம நபர்கள் காவித்துண்டு ஒன்றை போர்த்திவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் எம்.ஜி.ஆர் சிலை உள்ள இடத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் விரைந்தனர். பின்னர் அங்கு கூடிய அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலை மீது காவித்துண்டு போர்த்தப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

image


Advertisement

முன்னதாக, கோவையில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டிருந்தது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம், 2 வருடங்கள் சிறை: அதிரடி சட்டம்

loading...

Advertisement

Advertisement

Advertisement