4 வயது மகளை கடத்த முயன்ற கடத்தல்காரர்கள்: போராடி மீட்ட தாய் - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் கடத்தல்காரர்கள் கடத்திச் செல்ல முயன்ற, தனது 4 வயது மகளை தாய் மீட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கிழக்கு டெல்லிப் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை மாலை 4 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் தலைக்கவசத்துடன் வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் அங்குள்ள ஒரு பெண்மணியிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். அந்தப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக தனது கவனத்தை திருப்பியபோது, அவரது நான்கு வயது மகளை அந்த நபர்கள் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற்ற முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாய் உடனே ஓடிச் சென்று கடத்தல்காரர்களை வாகனத்தில் இருந்து கீழேத் தள்ளி, அவர்களிடம் இருந்து தனது மகனை ஆக்ரோஷமாக மீட்டார்.

அப்போது வாகனமானது கீழே விழுந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட வாகனத்தின் பின்னால் இருந்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சிறுமியின் தாய் வாகனத்தை பிடித்துக் கொண்டதால் மற்றொரு நபரால் முதலில் வாகனத்தை இயக்க முடியவில்லை. அதன் பின்னர் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றார்.


Advertisement


இதனையடுத்து வாகனத்தில் வேகமாக சென்ற அவரை, சாலையில் நின்ற ஒரு நபர் கீழேத் தள்ளி விட்டார். அந்த சமயத்தில் தப்பிக்க முயன்ற இன்னொரு நபரை அவர் பிடிக்க முயன்றார். ஆனால் அவரும் தப்பித்து ஓடி விட்டார். அதேசமயம் அவர்கள் வந்த வாகனமும், சிவப்பு நிறப் பையும் கைப்பற்றப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் விட்டுச்சென்ற வாகனத்தின் எண்ணை வைத்து கொள்ளையர்களை பிடித்தனர். அவர்கள் விட்டுச் சென்ற பையில் இருந்த நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் மாமா 35 லட்சம் பணத்திற்காக சிறுமியைக் கடத்த திட்டமிட்டதும் அவர்களுக்காக 1 லட்சம் ரூபாய் செலவழித்ததும் தெரியவந்தது, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement