ஸ்டோக்ஸை புகழ்ந்த இர்பான் பதான்... ரிப்ளை கொடுத்த யுவராஜ் சிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தார் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ். பேட்டிங், பவுலிங் என மெர்சல் காட்டி அணியை வெற்றி பாதைக்கு மீட்டெடுத்து வந்தார் ஸ்டோக்ஸ். 


Advertisement

image

இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இர்பான் பதான் ' பென் ஸ்டோக்ஸ் மாதிரியான மேட்ச் வின்னிங் ஆள் ரவுண்டர்கள் இந்திய அணியில் இருந்தால் உலகில் இந்தியா எங்கு சென்று விளையாடினாலும் மற்ற அணிகளால் வீழ்த்த முடியாத அணியாக இருக்கும்' என ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 
image
அவரது கருத்தை ஆதரித்தும், விமர்சித்தும் ட்விட்டரில் கருத்துகள் எழுகின்றன. ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா மாதிரியான மேட்ச் வின்னிங் ஆள் ரவுண்டர் இந்திய அணியில் இருப்பதை கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள் பதான் எனவும் பதிவு செய்து வருகின்றனர். 
 
இதனிடையே, ‘நம்மிடம் மேட்ச் வின்னிங் ஆல் ரவுண்டர் இல்லை என சொல்ல வருகிறீர்களா?' என பதானின் ட்வீட்டிற்கு ரிப்ளை கொடுத்தார் யுவராஜ். அதற்கு பதானோ மீண்டும், யுவராஜ் சிங் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுவிட்டாரோ என பதிவிட்டுள்ளார்.
loading...

Advertisement

Advertisement

Advertisement