சினிமா காதலர்களுக்கு ஒரு நற்செய்தி: வெளிவருகிறது தமிழ் சினிமா விமர்சனங்கள் தொகுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் சினிமாவின் பொற்காலம் என அழைக்கப்படும் 1931 முதல் 1960 ஆம் ஆண்டு வரையிலான திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், விமர்சகர்கள் பற்றிய வெளிவராத தகவல்கள் தொகுக்கப்பட்டு ‘தமிழ் சினிமா விமர்சனங்கள் நூல்’ விரைவில் வெளிவரவுள்ளது.  தமிழகத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த  27 பழம்பெரும் இதழ்களில் இருந்து விமர்சனங்களைத் தொகுத்துள்ளனர்.


Advertisement

image

அமெரிக்காவின் மிக்சிகன்ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் காட்சி ஊடகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல், திரைப்பட ஆய்வாளர் நிழல் திருநாவுக்கரசு இருவரும் சேர்ந்து பல ஆண்டு உழைப்பில் இந்த அரிய நூலைக் கொண்டுவருகிறார்கள்.


Advertisement

image

இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய பேராசிரியர் சொர்ணவேல், “தமிழ் சினிமாவின் 100 வது ஆண்டின்போதே  அரசும் நானும் இந்த நூலைக் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு காரணங்களால் தாமதமானது. தற்போது வெளிவருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு எழுத்தாளர்களின் பங்களிப்புகள் அந்தக்கால தமிழ் சினிமாவில் ஒளிர்வதைப் பார்க்கமுடிகிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பிரபல தீவிர இலக்கிய இதழ்கள், இடதுசாரிகள், சிறு தமிழ் சினிமா பத்திரிகைகள், சினிமா உலகம், குண்டூசி, பேசும் படம். சினி ஃபைல்ஸ் போன்ற பத்திரிகைகள் எனப் பல கோணங்களில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சினிமாவைப் படிக்கும் மாணவர்கள் மற்றும் காட்சி ஊடகம் தொடர்பான ஆசிரியர்களுக்கும் எங்களுடைய நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

image


Advertisement

பதிப்பாளர் நிழல் திருநாவுக்கரசு, “தமிழ் சினிமாவின் பொற்காலம் 1931-60 என்பது சினிமா  ரசிகர்களின் அபிப்பிராயம். பேராசிரியர் சொர்ணவேலுடன் இணைந்து  இந்த காலக்கட்டத்தைச் சேர்ந்த 140 படங்களை  எடுத்துக்கொண்டு ''தமிழ் சினிமா விமர்சனங்கள்'' என்ற தொகுப்பாகக் கொண்டுவந்துள்ளோம். 1931 முதல் 60 வரை வெளியான  நூற்றுக்கணக்கான படங்கள்  அழிந்துவிட்டன. நாம் இழந்துவிட்ட  அந்த அற்புதமான திரைக்காவியங்களை  மீண்டும் விமர்சனமாகவும்  நிழற்படமாகவும் நூலின் வழியாக வாசகர்கள் பார்க்கவைத்திருக்கிறோம். இந்திய அளவில் இதுபோன்ற ஒரு தொகுப்பு நூல் வெளிவருவது இதுவே முதல்முறை” என்றார்.

சுந்தரபுத்தன்

loading...

Advertisement

Advertisement

Advertisement