‘நான் எடுத்தது இவ்வளவு மதிப்பெண் தான்’ நம்பிக்கையூட்டும் மாதவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பள்ளித் தேர்வில் தான் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றேன் என்பதை தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன், இன்னும் உங்கள் விளையாட்டு தொடங்கவில்லை என மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.


Advertisement

அவரது டிவிட்டர் பதிவு மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தரப்பினருக்கும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. தன்னுடைய பள்ளித் தேர்வில் 58 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதாக டிவிட் செய்துள்ள அவர், எந்த வகுப்பு என்பதைக் குறிப்பிடவில்லை.  

"பள்ளித் தேர்வு முடிவுகளைப் பெற்ற அனைவருக்கும், அவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி அதை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் வாழ்த்துகள். என் பள்ளித்தேர்வுகளில் 58 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன் என்பதை மீதமுள்ளவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இனிய நண்பர்களே, விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை"  என்று டிவிட்டரில் மாதவன் தெரிவித்துள்ளார். 


Advertisement

முன்னதாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தது. குறைவான மதிப்பெண்கள் எடுத்துவிட்டதாக கருதி சில மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுத்த செய்திகளும் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் மாதவனின் ட்விட்டர் பதிவு மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement