டிக்டாக் இடத்தை நிரப்ப ரீல்ஸ் என்ற வசதியை இன்ஸ்டாகிராம் களம் இறக்கியுள்ளது
இந்திய - சீன லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி டிக் டாக், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட
சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்புகள் வந்தாலும், டிக் டாக் மூலம் பிரபலமடைந்த, வருமானம் ஈட்டிய பலர் வருத்தம் அடைந்துள்ளனர்.
130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஒரு நபர் பிரபலமடைய வேண்டும் என்பது சாதாரணம் அல்ல. ஆனால், இந்த எண்ணத்தை எளிதில் புரட்டிப் போட்டது சமூக வலைத்தளங்கள். குறிப்பாக டிக் டாக் போன்ற செயலிகள் சாமானியர்களையும் பிரபலமடையச் செய்தது.
அவர்களுக்குள் இருக்கும் கலைஞனை வெளிக்கொண்டு வந்தது. இந்த டிக் டாக்கில் பொழுதை கழித்தவர்களும், டிக் டாக் மூலம் பிரபலமானவர்களும் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். அதே நேரத்தில் டிக் டாக்கிற்கு ஏங்கி நிற்கும் இந்திய சந்தையில் எப்படியாவது புகுந்துவிட வேண்டுமென பல செயலிகள் முயற்சி செய்கின்றன. இந்த நேரத்தில் சமூக வலைத்தள ஜாம்பவான் ஃபேஸ்புக் தன்னுடைய நிறுவனமான இன்ஸ்டா மூலம் புது வசதியை டிக் டாக் இடத்தில் நிரப்ப களம் இறங்கியுள்ளது.
இன்ஸ்டாவில் ரீல்ஸ் என்ற வசதி மூலம் 15 விநாடி சிறிய வீடியோக்களை பதிவு செய்து ஷேர் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதனை நேரடியாக அவரவர்களின் இன்ஸ்டாவில் ஷேர் செய்யலாம். இன்ஸ்டாவின் இந்த புதிய வசதி டிக் டாக் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்
நேபாள பிரதமரைக் காப்பாற்றும் முயற்சியில் சீனா: காய் நகர்த்தும் சீன தூதர்!!
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!