காஞ்சிபுரம் பெருநகராட்சி கொரோனா தடுப்புப் பணிகளைக் கையாள்வதில் அலட்சியம் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு தாயார்குளம் பகுதியில் கொரோனா தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அந்த இடமானது கடந்த மூன்று நாட்களைக் கடந்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை எனவும் தடுப்புகளும் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
சுகாதார பணியாளர்களும் அந்த இடத்தில் எந்தத் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகும் கூட அந்த இடத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்குப் பல முறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
இது மட்டுமல்லாமல் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினரும் வெளியே சுற்றி வருவதால் தாயார்குளம் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. ஆகவே உடனடியாக கொரோனா நோயாளியின் வீட்டை முழுவதுமாக தனிமைப்படுத்தி அந்த இடம் முழுவதுமாக தடைசெய்ய வேண்டும் என்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்