உலக அளவில் 1.02 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

Coronavirus-live-updates--Developments-in-India-and-rest-of-world

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.02 கோடியைத் தாண்டியுள்ளது.


Advertisement

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.தொற்று நோயாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட திணறி வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.02 கோடியைத் தாண்டியுள்ளது.

image


Advertisement

worldometers என்ற இணையதளம் வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு விவரங்களின்படி இந்த எண்ணிக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை 1,02,43,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,04,410 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 55,53,495 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர்.

image
அதிகபட்சமாக அமெரிக்காவில் 26,37,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1,28,437 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 13,45,254 பேரும், ரஷ்யாவில் 6,34,437 பேரும் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 5,49,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தோனியின் காலகட்டத்தில் பிறந்ததால் வருத்தப்படவில்லை” பார்த்திவ் படேல் !


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement