JUST IN

Advertisement

4 லட்சத்தைக் கடந்த பாதிப்பு: இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் 15,203 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்த பாதிப்பு 4,10,923 ஆக உள்ளது.


Advertisement

முதல் ஒரு லட்சம் பாதிப்புக்கு 109 நாட்கள் ஆன நிலையில் தற்போதைய நிலவரப்படி கடைசி ஒரு லட்சம் பாதிப்பானது 8 நாட்களில் கண்டறியப்பட்டுள்ளது. 13,183 பேர் கொரோனாவிற்கு இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 2,27,705 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

image


Advertisement

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,28,205 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று 160 பேர் கொரோனாவிற்கு அங்கு உயிரிழந்த நிலையில் மொத்தமாக 5,894 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பை பகுதி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

சென்னையைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்புக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 704 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement