கருணாநிதியை போல் கட்சியை வழிநடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை - கே.பி.ராமலிங்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கருணாநிதியை போல் கட்சியை வழிநடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை என கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


Advertisement

சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் விவசாய அணி மாநில செயலாளருமான கே.பி. ராமலிங்கம் நேரில் சந்தித்து பேசினார்.

திமுக-வின் கே.பி.ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் பாஜகவில் இணைய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.


Advertisement

என் கருத்தை வாபஸ் வாங்க மாட்டேன் கே.பி.ராமலிங்கம்- Dinamani

தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா: மூடப்பட்ட அலுவலகம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம், “விவசாயிகளுக்காக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதற்காக விவசாய சங்கங்களின் சார்பில் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள நாடக அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின். திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. என்னைப்போல் பாதிக்கப்பட்டவர் நிறைய பேர் திமுகவில் உள்ளனர். கருணாநிதியை போல் கட்சியை வழிநடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement