JUST IN

Advertisement

குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ட்ரம்ப் ! மறுக்கும் சீனா - பின்னணி என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸை பரப்பிய சீனா, அதனை மாஸ்க் போட்டு மறைக்க நினைக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார். இதனை சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சீன ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என அமெரிக்கா அடித்து சொல்கிறது.

image


Advertisement

வாஷிங்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் பயங்கரமான தவறு செய்திருக்கும் சீனா, அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறது எனக் குற்றஞ்சாட்டினார். கொரோனா வைரஸ் விவகாரத்தை சீனா மாஸ்க் போட்டு மறைக்க நினைக்கிறது என விமர்சித்த ட்ரம்ப், தீ போன்ற கொரோனா வைரஸை யாருக்கும் தெரியாமல் சீனா அணைக்க முயற்சித்தது என்றும் ஆனால் முடியவில்லை என தெரிவித்தார். மேலும் கொரோனா விவகாரத்தில் சீனாவின் வுகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து மிகவும் வலுவான அறிக்கையை விரைவில் வெளியிடுவோம் என்றும் டிரம்ப் கூறினார்.

image

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக திணறிவரும், அமெரிக்காவில், ஒரே நாளில் சுமார் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்து 400 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பர் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சரியான நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் 22 லட்சம் பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்றார். ஆனால் தனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Advertisement

image

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் பிற நாடுகள் அமெரிக்காவை வென்றால், அந்நாட்டுக்கு தலைவணங்குவேன் என அதிபர் ட்ரம்ப்குறிப்பிட்டார். கொரோனா வைரசிற்கு தடுப்பூசி மருந்து முறையை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்த அதிபர் ட்ரம்ப், இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி மருந்தை அமெரிக்கா கண்டுபிடித்துவிடும் என உறுதியளித்தார். அதே நேரத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கண்டறிய 18 மாதங்களுக்கு மேல் ஆகும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்காமல் தேவையில்லாததையெல்லாம் ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கிறார் என வல்லுநர்கள் விமர்சிக்கத்தொடங்கியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement