சென்னை பெரியமேட்டில் அடுத்தடுத்த 5 வீடுகளில் 8 பேருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை பெரியமேட்டில் அடுத்தடுத்த 5 வீடுகளில் 3 வயது குழந்தை உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170-ஐ கடந்தது. ஒரே நாளில் 174 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று முன் தினம் ஒரே நாளில் சென்னையில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை அளித்தது. வட சென்னையில் தான் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது.

image


Advertisement

இந்நிலையில், சென்னை பெரியமேட்டில் அடுத்தடுத்த 5 வீடுகளில் 3 வயது குழந்தை உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெரியமேடு, ஷ்ரிங்கர் தெரு பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் 27 வயது ஆண், 48 வயது பெண், 56 வயது பெண், 15 வயது ஆண், 3 வயது ஆண் குழந்தை, 35 வயது பெண், 42 வயது ஆண் மற்றும் 60 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement