JUST IN

Advertisement

கொரோனா தொற்றில் முதலிடத்தில் திரு.வி.க நகர் மண்டலம்- என்ன சொல்கிறது சென்னை நிலவரம்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170-ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 174 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 15, 27 என்று இருந்த புதிய பாதிப்பு ஏப்ரல் 24ஆம் தேதி 50ஐ கடந்தது. அதன்பின் ஏற்ற இறக்கத்தோடு இருந்த பாதிப்பு ஏப்ரல் 28ஆம் தேதி சதத்தை கடந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி 138ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சென்னையில் 176ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

image

இந்நிலையில், சென்னையில் மண்டல ரீதியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில், 290 பேருடன் திரு.வி.க நகர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தபடியாக ராயபுரம் 252 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு பகுதிகள் தான் கொரோனா தொற்றில் சென்னையில் உச்சத்தில் உள்ளது.


Advertisement

image

அடுத்ததாக, தேனாம்பேட்டை 145, கோடம்பாக்கம் 141, தண்டையார்பேட்டை 110, அண்ணாநகர் 108 ஆகியவை நூறினை கடந்துள்ளது. மிகக்குறைவான மணலி 5, சோழிங்கநல்லூர் 5, மாதாவரம் 8, பெருங்குடி 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

அதேபோல், சென்னை ராயபுரத்தில் அதிகபட்சமாக கொரோனா நோய் தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக அண்ணாநகரில் 4 பேரும், திரு.வி.க நகரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 

ஏப்ரல் 23ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஆக இருந்தது. இந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து மே 1 ஆம் தேதி சென்னையில் மட்டுமே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. தற்போது புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 257ஆக அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது மொத்த பாதிப்பில் 45.5 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா முன்கள வீரர்களுக்கு முப்படைகளின் கவுரவம் - காற்றில் பறந்த மலர்கள் 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement