கர்ப்பிணிகளின் மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: மதுரை ஆட்சியர் அறிவிப்பு

The-Madurai-District-Collector-has-called-the-telephone-numbers-for-pregnant-women-seeking-medical-advice
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை  மற்றும்  உதவி பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை  மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
கொரோனா தொற்று பணிகளைக் காரணம் காட்டி மதுரையில் பல்வேறு கிராமப் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவத்திற்கு முன்பே எடுக்கப்படும் ஸ்கேன் மற்றும் ஊசிகளைப் போட்டுக் கொள்ள முடியாத நிலைமை இருந்து வருகிறது. அவர்களுக்கு ஏதேனும்  வாகன உதவிகள் தேவைப்பட்டால் யாரைத் தொடர்பு கொள்வது என்ற குழப்பமான நிலை இருந்து வருகிறது.
 
image
 
இந்த நிலையில் மதுரையில் கடந்த வாரத்தில் மட்டும் செட்டியபட்டி, பொட்டல் பட்டி மற்றும் எழுமலை பகுதியிலிருந்து வந்த கர்ப்பிணிப் பெண்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல் கால தாமதத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிசுக்கள் வயிற்றிலேயே இறந்த கொடுமை அரங்கேறியதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
image
 
இதனைத்தொடர்ந்து மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோன வைரஸ் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகின்றது. அதில் கட்டணமில்லா எண்-1077 மற்றும் 0452 2546160, 95971 76061 போன்ற தொலைபேசி எண்கள் இயக்கி வருகின்றன. எனவே  கர்ப்பிணிப் பெண்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு  மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement