"மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்" அதிரடி காட்டும் மாநிலம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

image

இந்தியாவில் இதுவரை 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,796 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மே 3 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் கேரளாவின் வயாநாடு மாவட்டம் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது. அதாவது ஊரடங்கின்போது முகக்கவசம் இல்லாமல் வெளியே சுற்றினால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

image

இது குறித்து தெரிவித்துள்ள வயாநாடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.இளங்கோ "பொது இடங்களில் முகக்கவசம் இல்லாமல் யாரேனும் சுற்றித் திரிவதை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். மேலும் கடைகளில் சோப்புகள் அல்லது சானிடைஸர்கள் இல்லாமல் இருந்தால் ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement