JUST IN

Advertisement

இரட்டை வேடங்களில் ‘மாஸ்டர்’ விஜய்? - ரகசியம் காக்கிறாரா இயக்குநர்? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இதனை ‘மாநகரம்’ மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவருடன் விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
image
 
இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த திரை உலகமும் முடங்கிப் போய் கிடக்கிறது.
 
ஆகவே அடுத்த மாதமும் ‘மாஸ்டர்’ வெளியாகுமா என அவரது ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர். இதனிடையே ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் திட்டமிட்டவாறு விறுவிறுப்பாக நடந்து வருவதாகக் கூறப்பட்டது. நாடு முழுவதும்  ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், தனது ஒளிப்பதிவு சார்ந்த டிஐ தொழில்நுட்ப வேலைகளை (டிஜிட்டல் இண்டர்மிடியேட்) மும்முரமாகச் செய்து வருவதாக கூறப்பட்டது.
 
image
 
மேலும், இந்தப் படத்தின் விஜய் சேதுபதி கதாபாத்திரம் தொடர்பாக சில விவரங்கள் வெளியாகின. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வில்லனாக நடித்து வருவதாகவே  நம்பப்பட்ட நிலையில், ஆனால் இதில் விஜய் சேதுபதியும் விஜயும் நண்பர்களாக இருந்து பின் அவர்களிடையே ஏற்படும் கருத்து முரண்பாடு மோதலாக உருவெடுக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகப் பேச்சு அடிப்பட்டது. அதற்கு ஏற்ப கடந்த மாதம் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, பேசிய விஜய் சேதுபதி ‘இந்தப் படத்தில் யாரும் ஹீரோவும் கிடையாது. வில்லனும் கிடையாது’ என்று கூறியது இதனுடன் தொடர்பு படுத்தி தகவல் வெளியானது.
 
image
 
இந்நிலையில், ‘மாஸ்டர்’ படம் பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.  இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு கடைசி வரை தெரியப்படுத்தாமல் ரகசியம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
சமீப காலமாகவே விஜய் தொடர்ந்து இரட்டை வேடங்கள் நிறைந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒருவேளை எதிர்பார்ப்பதைப் போல ‘மாஸ்டர்’ படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் அது பெரிய விருந்தாகவே அவரது ரசிகர்களுக்கு அமையும் என்பது சந்தேகம் இல்லை. இருப்பினும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானால்தான் அல்லது படம் வெளியானானால்தான் தெரியவரும்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement