ஏற்றுமதியாளர்கள் பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை - மத்திய வர்த்தக அமைச்சகம்

Commerce-ministry-lists-steps-to-support-exporters-as-industry-expresses-fears-of-huge-job-losses

கொரோனா தொற்று எதிரொலியாக ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

ஏற்றுமதித் துறையினருக்கு உடனடியாக ஊக்கச் சலுகைகள் அறிவிக்கப்படாவிட்டால் ஒரு கோடியே 15 லட்சம் பேர் வேலையை இழந்துவிடுவார்கள் என ஏற்றுமதியாளர்கள் அமைப்பு கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது

image


Advertisement

கொரோனா தொற்று நோயால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு அடையும் சூழல் உள்ளதால் பல்வேறு விஷயங்களை தளர்த்தியும், கால நீட்டிப்பு வழங்கியுள்ளதாகவும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை ஓராண்டுக்கு நீட்டித்தல், ஏற்றுமதியை ஊக்குவிக்க முன்கூட்டியே அங்கீகாரம் வழங்குதல், உறுப்பினர் சான்றிதழ்களுக்கு பதிவு செய்வதை நீட்டித்தல் உள்ளிட பல்வேறு நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement