JUST IN

Advertisement

“நான் சிங்கிள்.. முரட்டு சிங்கிள்” - பிந்து மாதவி சாட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
 
சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை பிந்து மாதவி சாட்டிங் மூலம் பதிலளித்தார்.
 
கொரோனா பாதிப்பு உலகை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில், பணக்காரர்கள் ஏழைகள் என்ற வேறுபாடு இல்லாமல் தனிமைப்பட்டு உள்ளனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணப்பட முடியாத சூழல் நிலவுகிறது. பெரும் நடிகர், நடிகைகள் கூட இந்த நாட்டில்தான் பிரச்னை வேறு நாட்டிற்குப் போய்விடுவோம் என முடிவு எடுக்க முடியாத நிலையே உள்ளது. ஏனெனில் உலகமே முடங்கிப் போய் உள்ளது.
 
Bindu Madhavi - Still 2 - Varutha Padatha Valibar Sangam 1 - 44402
 
இந்த நேரத்தைத் திரைப் பிரபலங்கள் பல ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள சில்லறை வேலைகளை தாங்களே செய்வது. அவர்களின் ரசிகர்களிடம் சமூக ஊடகம்  மூலமாக உரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிதான் ‘கழுகு’ பட நடிகை பிந்து மாதவி சமீபத்தில் அவரது ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதில் அளித்தார்.
 
Your Concert Is So Horrible,
 
அப்போது அவர் பல கேள்விகளுக்கு ஒளிமறைவில்லாமல் வெளிப்படையாகப் பதிலளித்தார். அவருக்கு ஒரு க்ரஷ்  இருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டைத் தந்தது என்றும் கூறியுள்ளார். ஆகவே இப்போது இல்லை. அது ஒரு சிக்கலான இருந்தது எனத் தெரிவித்தார். இந்த சாட் நிகழ்வில் அவர் மிக உற்சாகமாகவே காணப்பட்டார். ஒருவர் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு ‘நான் சிங்கிள்.. ஆமாம் நான் சிங்ள்தான்’ என்று அழுத்தமாகக் கூறினார்.
 
பிந்து மாதவி கிருஷ்ணாவுடன் ‘கழுகு2’ படத்தில் நடித்திருந்தார். இதனைச் சத்யா சிவா இயக்கி இருந்தார்.  அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ்  நிகழ்ச்சி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement