JUST IN
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு வரை "ஆல் பாஸ்"

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அறிவிக்க பள்ளி கல்வித் துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

image

சென்னையில் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு 

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதன் காரணமாக குஜராத், உத்தரப்பிரேதசம், புதுச்சேரி மாநில அரசுகள் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருந் ஆல் பாஸ் என அறிவிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

image

புதுச்சேரியில்  1 முதல்  9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி 

மேலும் மார்ச் 24 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வை ஊரடங்கு காரணமாக சில மாணவர்களால் எழுத முடியவில்லை. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வை நடத்தவும் தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement: