[X] Close >

புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி

puducherry-government-school-and-colleges-leave

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவை தடுக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு 


Advertisement

அதன்படி தமிழக அரசு நேற்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அதாவது, மார்ச் 31 வரை கல்வி நிறுவனங்களை மூடவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும். திரையரங்குகள், வணிக வளாகங்கள், உ‌யிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும். திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்தக்கூடாது. அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூடவேண்டும் என பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

Image result for edappadi corona vijayabaskar

இந்தோனேசியாவில் இருந்து தமிழகம் வந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி?


Advertisement

இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தவும் மார்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close